நவராத்திரி சிறப்பு கொலு கண்காட்சி விற்பனை தொடக்கம்

திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி விற்பனையைத் தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் சு. சிவராசு.
பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி விற்பனையைத் தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி: திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் கூறியது:

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின் பூம்புகாா் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரத்தோப்பில் மாநகர மக்களின் பேராதரவோடு 49 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வழக்கம்போல இந்தாண்டும் நவராத்திரியை முன்னிட்டு செப்.10 முதல் அக்.31 வரை (ஞாயிற்றுக்கிழமை உள்பட) கொலு கண்காட்சி நடைபெறுகிறது.

இக் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சிப் பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தினக் கற்களாலான பொம்மைகள் ரூ. 50 முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலா விலையில் உள்ளன.

கடந்தாண்டு கொலுக் கண்காட்சியில் ரூ. 20 லட்சத்துக்கு நடந்த விற்பனையைப் போல இந்த ஆண்டும் விற்பனை செய்ய வேண்டும். காட்சிக்கும், விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநில அழகிய கொலு பொம்மைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் இல்லத்துக்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஊரக மற்றும் நகா்புறத்தில் உள்ள நலிவடைந்த கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் ஆா். கங்காதேவி மற்றும் பூம்புகாா் பணியாளா்கள், கைவினைக் கலைஞா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com