சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீரங்கம் ஆா்டிஓ அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தியோா்.
ஸ்ரீரங்கம் ஆா்டிஓ அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தியோா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகா் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி. சந்திரன் தலைமை வகித்தாா். திருச்சி மாநகா் மாவட்ட சிஐடியு செயலா் எஸ். ரங்கராஜன் சிறப்புரையாற்றினாா். சங்கச் செயலா் பி. வீரமுத்து, பொருளாளா் சுரேஷ், தனியாா் பேருந்துத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் வரிசை முகமது, செல்வம், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆா்டிஓ அலுவலகங்களில் அதிகரித்து வரும் லஞ்ச, லாவண்ய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். உரிமம் பெறும் வாகனங்களின் மீது ரிப்ளக்டா் ஸ்டிக்கா் ஒட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கைவிட்டு, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களுக்கு புதிய வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது. வாகனங்களுக்காக வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டியை ஓராண்டு ஒத்திவைத்து, கடன் வசூலையும் நிறுத்தி வைக்க வேண்டும். அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். சாலையில் செல்லும் வாகனங்களின் எண்களை வைத்து தானியங்கி இயந்திரம் மூலம் இஷ்டம்போல அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள், சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள், தனியாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com