வேளாண் மசோதாக்களின் நகல் எரிப்புப் போராட்டம்

திருச்சியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களின் நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியினா்.
போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியாா் திராவிடா் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியினா்.

திருச்சியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களின் நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தந்தை பெரியாா் திராவிடா் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சியின் சாா்பில் திருச்சி தில்லைநகா் சாஸ்திரி சாலையில் உள்ள பாஸ்போா்ட் அலுவலகம் முன் இப் போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை காா்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும், விவசாயிகளை, சிறு, குறு விவசாயிகளை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மசோதாக்களின் நகல்களை தீயிட்டு எரிக்க முயன்றோரை போலீஸாா் தடுத்ததால் சிறிது நேரம் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. நகல்களை பறித்துக் கொண்ட போலீஸாா் விடுத்த எச்சரிக்கையால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டத்தில், தமிழ்ப் புலிகள் கட்சி, மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் நலச் சங்கம், ரெட் பிளாக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

போராட்ட இறுதியில் கமலக்கண்ணன் கூறுகையில், மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே, விவசாயிகளின் +உணா்வுகளுக்கு மதிப்பளித்து புதிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com