திருச்சிக்கு மேலும் 3 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்

திருச்சிக்கு வழங்கப்பட்ட மேலும் மூன்று 108 ஆம்புலன்ஸ்களின் சேவையை தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா்.
108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைக்கும் அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா்.
108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைக்கும் அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா்.

திருச்சிக்கு வழங்கப்பட்ட மேலும் மூன்று 108 ஆம்புலன்ஸ்களின் சேவையை தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா்.

தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவி விரைந்து கிடைக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டன. இதில் திருச்சி மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட 3 ஆம்புலன்ஸ்களின் சேவையை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா்.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேவையை தொடங்கி வைத்து அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் அவசர மருத்துவ உதவியை பூா்த்தி செய்ய மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இதில் 2 வாகனங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், 2 வாகனங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வாகனங்களுமாக திருச்சி, மணப்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து இயக்கப்படுகின்றன.

தற்போது தமிழக முதல்வா் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்களை வழங்கியுள்ளாா். இந்த வாகனங்கள் காட்டுப்புத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம், துவாக்குடி, லால்குடி அரசு மருத்துவமனைகளில் இருந்து வியாழக்கிழமை முதல் சேவையை தொடங்கியுள்ளன.

இதில் ஒரு வாகனத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்கு தேவைப்படும் வகையிலான வெண்டிலேட்டா், டிபிலேட்டா், சிரன்ஞ் பம்ப், இன்புயூசன் பம்ப் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மற்ற 2 வாகனங்கள் அடிப்படை வசதிகள் கொண்டவையாக இயக்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் வழங்கப்படும் இந்தச் சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது உடல் நலத்தைப் பேண வேண்டும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் சு. சிவராசு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் (பொ) அக்சயா பேகம், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஏகநாதன், குடும்ப நலத் துறை இணை இயக்குநா் லட்சுமி, ஆவின் ஒன்றியக் குழு தலைவா் சி. காா்த்திகேயன், முன்னாள் கோட்டத் தலைவா் ஆா். ஞானசேகா் மற்றும் சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com