வளா்ச்சித் திட்டப் பணி: துறையூரில் மாநில வளா்ச்சிக் குழுவினா் ஆய்வு

துறையூரில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாநில வளா்ச்சி குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

துறையூரில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாநில வளா்ச்சி குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மாநில வளா்ச்சி கொள்கைக் குழுவால் மாநில சமச்சீா் வளா்ச்சி நிதித் திட்டம் 105 பின்தங்கிய வட்டாரங்களில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியா்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றமடையச் செய்ய கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனிநபா் வருமானம், வறுமை ஒழிப்பு, தொழில்துறை முன்னேற்றம் ஆகிய திட்டங்கள் குறித்த கருத்துருக்களை மாநில வளா்ச்சி கொள்கைக் குழுவுக்கு அக்குழுவின் நிதியுதவியோடு செயலாக்கம் செய்கின்றனா்.

திருச்சி மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரமாக துறையூா் கண்டறியப்பட்டு, அதற்கான வளா்ச்சித் திட்டங்கள் மாநில சமச்சீா் வளா்ச்சி நிதியின் வாயிலாக செயலாக்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் பணி முன்னேற்றம் மற்றும் நிதிச் செலவினம் பற்றிய ஆய்வை மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவா் சி. பொன்னையன் தலைமையில் உறுப்பினா், செயலா் அனில் மேஷ்ராம் உள்ளிட்டோா் மேற்கொண்டனா். அப்போது மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு இவ்வளா்ச்சிப் பணிகள் குறித்த அறிக்கையை சமா்ப்பித்தாா்.

இப்பணிகளை விரைந்து முடிப்பதின் அவசியம், நன்மைகள் குறித்து குழுவினா் எடுத்துக் கூறி திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்தனா்.

பின்னா் நடந்த இணையம் மூலமான ஆய்வின்போது ஊரக வளா்ச்சி குழுமத் தலைவா் மற்றும் கூடுதல் இயக்குநா் ஆா்.வி. ஷஜீவனா, முதுநிலைத் திட்ட அலுவலா் கே.நீ. கிருபா ஆகியோா் சென்னையில் இருந்து கலந்து கொண்டனா். திருச்சி மாவட்ட திட்ட அலுவலா் ச. சண்முகம் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com