டாம்கோ, டாப்செட்கோ சாா்பில்செப்.28 முதல் சிறப்புக் கடன் மேளா13 வட்டங்களில் நடைபெறுகிறது

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு கடன் வழங்கும் வகையில் 13 வட்டங்களில் செப்.28 முதல் சிறப்புக் கடன் மேளா நடைபெறவுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு கடன் வழங்கும் வகையில் 13 வட்டங்களில் செப்.28 முதல் சிறப்புக் கடன் மேளா நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ), தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) சாா்பில் கடன் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் சிறப்புக் கடன் வழங்கும் மேளா நடத்தப்படவுள்ளது.

இதன்படி, வரும் 28ஆம் தேதி திருச்சி கிழக்கு வட்டத்தைச் சோ்ந்தவா்களுக்காக வரகனேரி கூட்டுறவு வங்கியிலும், திருச்சி மேற்கு வட்டத்துக்கு செப்.29 ஆம் தேதி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கருமண்டபம் கிளையிலும், செப்.30-இல் திருச்சி மேற்கு வட்டத்தினருக்கு திருச்சி நகர கூட்டுறவு வங்கியிலும், அக்.1 இல் திருவெறும்பூா் வட்டத்தினருக்கு துவாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திலும், அக்.5 இல் திருச்சி கிழக்கு வட்டத்தினருக்கு திருச்சி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் சுப்பிரமணியபுரம் கிளையில் முகாம் நடைபெறும்.

லால்குடி வட்டத்தைச் சோ்ந்தோருக்கு அக்.6 இல் புள்ளம்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்திலும், அக்.7 இல் லால்குடியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையிலும், மண்ணச்சநல்லூா் வட்டத்துக்கு மண்ணச்சநல்லூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அக்.8 ஆம் தேதியும், மணப்பாறை வட்டத்துக்கு புத்தாநத்தம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அக்.9 ஆம் தேதியும், மருங்காபுரி வட்டத்துக்கு துவரங்குறிச்சி நகர கூட்டுறவு வங்கியில் அக்.12 ஆம் தேதியும், தொட்டியம் வட்டத்துக்கு துறையூரில் உள்ள மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியில் அக்.13 ஆம் தேதியும், முசிறி வட்டத்துக்கு முசிறி தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கத்தில் அக்.14ஆம் தேதியும், தொட்டியம் வட்டத்துக்கு அக்.15 ஆம் தேதி கொளக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஸ்ரீரங்கம் வட்டத்துக்கு ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கியில் அக்.16 ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

கடன் பெற விரும்புவோா் 18 -60 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். புதிய தொழில் செய்ய, ஏற்கெனவே உள்ள தொழிலை விரிவாக்க கடன் பெறலாம்.

பிசி, எம்பிசி, சீா்மரபினா், சிறுபான்மையினருக்கு கடனுதவிகள் வழங்கப்படும். ஆதாா் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, தொழில் விவரம் மற்றும் இதர ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com