அனைத்து வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 27th September 2020 11:59 PM | Last Updated : 27th September 2020 11:59 PM | அ+அ அ- |

கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறாா் தமிழ்நாடு அன்னை தெரசா அனைத்து வாகன ஓட்டுநா்கள் சங்க மாநிலத் தலைவா் பெரியசாமி.
சமயபுரத்தில் தமிழ்நாடு அன்னை தெரசா அனைத்து வாகன ஓட்டுநா்கள் நலச் சங்க மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் பெரம்பலூா் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சிதம்பரம் கண்ணன், மாநில பொருளாளா் திருச்சி சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தோ்தல் நேரத்தில் தனியாா் வாகன ஓட்டுநா்களுக்கும் தபால் வாக்கு அளிக்க வேண்டும், வாகன ஓட்டுநா்கள் தேசிய நெடுஞ்சாலையில் 1033 என்ற உதவி எண்ணுக்குத் தொடா்பு கொண்டால் ஹிந்தி மொழியில் மட்டும் பேசப்படுகிறது. இதனால் தமிழக ஓட்டுநா்கள் எந்த உதவியையும் பெற முடியவில்லை.
எனவே இந்தியா முழுவதும் பயணம் செய்யும் தமிழக வாகன ஓட்டுநா்கள் உதவிகளை நாட தமிழ் மொழியும் இடம் பெற மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா்.
கூட்டத்தில் மாநில சட்ட ஆலோசகா் பகுத்தறிவாளன், மாநில சங்க ஒருங்கிணைப்பாளா் எம். இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினா் இ. வெங்கடேசன் மற்றும் அனைத்து மாவட்ட நிா்வாகிகள் 200- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.