புதிய வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு இனி ஊக்கத்தொகை கிடைக்காது: கே.என்.நேரு 

புதிய வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு இனி ஊக்கத்தொகை கிடைக்காது என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

புதிய வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு இனி ஊக்கத்தொகை கிடைக்காது என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றிய மத்திய அரசையும் ஆதரித்த அதிமுக அரசையும் கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இன்று தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி திமுக முதன்மை செயலாளர் கே. என். நேரு  தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே  கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி  உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமுக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய கே.என்.நேரு  மத்திய மாநில அரசுகளின் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்து வந்தது. இவை விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக இருந்த அந்த நிலையில் இதனை மாற்றி  விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் இந்த புதிய வேளாண் சட்டங்கள் காரணமாக இனி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களே இருக்காது. கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை ஆலை உரிமையாளர்கள், அதிகாரிகள்  சொல்லும் தேதியில் தான் வெட்ட வேண்டும் அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் தான் விற்பனை செய்ய நேரிடும்.

எனவே இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றி. இந்த வெற்றி சட்டப்பேரவைத் தேர்தல் வரை தொடரும். திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com