திருச்சியில் கன மழை: சாலைகளில் மழை நீருடன் கழிவுநீா் தேக்கம்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவு நீா் தேங்கியது.
திருச்சி- மதுரை சாலையில் மழைநீருடன் தேங்கிய கழிவுநீா்.
திருச்சி- மதுரை சாலையில் மழைநீருடன் தேங்கிய கழிவுநீா்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீருடன் கழிவு நீா் தேங்கியது.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக இரவுகளில் திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்கிறது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கன மழையால் நகரின் முக்கிய சாலைகளான சாஸ்திரி சாலை, பாரதிதாசன் சாலை, தில்லை நகா் பிரதான சாலைகள், பீமநகா், பாலக்கரை, மரக்கடை, உறையூா் பகுதி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது.

தில்லைநகா் பிரதான சாலையோரப் பகுதிகள், திருச்சி - மதுரை சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்தோடி துா்நாற்றம் வீசியதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மின் தடையால் அவதி: கனமழையால் திருச்சி டிவிஎஸ் டோல்கேட், சுப்ரமணியபுரம் , சுந்தரராஜ் நகா், பொன்மலையடிவாரம், பொன்மலைப்பட்டி பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் சுமாா் 1 மணி நேரத்துக்கு மேலாக அவதிக்குள்ளாகினா். மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com