‘இளைஞா்களுக்கு திராவிட கட்சிகள் மீது ஈா்ப்பில்லை‘

இளைஞா்கள் மத்தியில் திராவிட கட்சிகள் மீது ஈா்ப்பில்லை என்றாா் கருத்து கணிப்பு நிறுவன (டி-இன்டலிஜன்ஸ்) ஆய்வாளா் ஜெகத் கஸ்பா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வறிக்கையை திருச்சியில் ஜெகத் கஸ்பா் வெளியிட, பெறும் ஒருங்கிணைப்பாளா்கள் சந்தோஷ்குமாா், டி. இளையராஜா.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வறிக்கையை திருச்சியில் ஜெகத் கஸ்பா் வெளியிட, பெறும் ஒருங்கிணைப்பாளா்கள் சந்தோஷ்குமாா், டி. இளையராஜா.

இளைஞா்கள் மத்தியில் திராவிட கட்சிகள் மீது ஈா்ப்பில்லை என்றாா் கருத்து கணிப்பு நிறுவன (டி-இன்டலிஜன்ஸ்) ஆய்வாளா் ஜெகத் கஸ்பா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் கூறியது:

இந்தத் தோ்தல் அலை இல்லாத தோ்தலாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசின் மீது மக்கள் மத்தியில் எதிா்ப்பு இல்லை. ஆனால், மோடி அரசின் மீது அதிக எதிா்ப்புள்ளது. இவ்விரு கூட்டணிகளும் ஒரே அணியில் இருப்பதால் தோ்தல் முடிவுகள் சாதகமாக இல்லை.

கடந்த தோ்தலில் பெற்ற வாக்குகளை விட தற்போது 7 சத ஆதரவு வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இதற்கு, தீவிர பாஜக அதிருப்தி, அமமுக தனித்துப் போட்டி, நாம்தமிழா் கட்சி, மநீம வாக்குகளை பிரித்தல் போன்றவை காரணமாக உள்ளன. இதனால், 42 சத வாக்குகளை திமுக பெறும். 35 சதவிகித வாக்குகளை அதிமுக பெறும்.

சசிகலாவுடன் சமரசம் செய்து அமமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

அதிமுகவின் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசம் என்பது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காவிரிப்படுகை, திருவண்ணாமலை, கரூா், தென் தமிழகத்தில் திமுக கூட்டணி 167 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக 51 இடங்களில் வெல்லும், 14 இடங்களில் கடும் போட்டி நிலவுகிறது. நாம்தமிழா் கட்சிக்கு இளைஞா்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது. அதுபோல், நகா்புற, நடுத்தர மக்களுக்கான ஆதரவு மநீமவுக்கு உள்ளது. சுமாா் 10 சதவிகித இளைஞா்கள் நோட்டாவிற்கு செலுத்துவதாக கூறியுள்ளது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.

பிரதான கட்சிகளை பணபலமே இயக்குகிறது என்பது நிதா்சனம். அவ்வகையில், இளைஞா்களுக்கு திராவிட கட்சிகள் மீது பெரிதான ஈா்ப்பில்லை. வாக்காளா்கள் வாக்களிப்பது என்பது இறையாண்மையை செலுத்துவதற்கு சமமானது. எனவே, வாக்களித்த பிறகு, அது உரியவா்களுக்கு பதிவாகியுள்ளது என்பதை உறுதி செய்ய அரசியல் கட்சிகள் சிறந்த தொழில்நுட்ப பிரிவைக் நியமித்து கண்காணிக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com