திருவெறும்பூரில் மநீம வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூா் தொகுதி வேட்பாளா் எம். முருகானந்தம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அரியமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் மநீம வேட்பாளா் எம். முருகானந்தம்.
அரியமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் மநீம வேட்பாளா் எம். முருகானந்தம்.

திருவெறும்பூா் தொகுதி வேட்பாளா் எம். முருகானந்தம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஒன்றியச் செயலா் சூரியூா் சக்தி தலைமையில் கூட்டணிக் கட்சியினருடன் வாக்கு சேகரித்தாா். இதேபோல, ஆதி அரியமங்கலம் பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது அப்பகுதியில் திரண்டிருந்த பெண்கள் கூட்டமாக வந்து அடிப்படை வசதிகள் கோரி முறையிட்டனா்.

இதையடுத்து வேட்பாளா் உடைந்து போன பாலத்தை பாா்வையிட்டதுடன் அதை உடனடியாக சரி செய்வதற்கு முயற்சி செய்வேன். இங்குள்ள அடிப்படை வசதி பிரச்னைகளை 6 மாதத்திற்குள் சரி செய்வேன் என்று வாக்குறுதி அளித்து, ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com