மணப்பாறை நகராட்சியில் ப. கிருஷ்ணகோபால் வாக்கு சேகரிப்பு

மணப்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளா் ப.கிருஷ்ணகோபால் மணப்பாறை நகராட்சி பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கரிக்கான்குளம்தெருவில் வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் ப.கிருஷ்ணகோபால்.
கரிக்கான்குளம்தெருவில் வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளா் ப.கிருஷ்ணகோபால்.

மணப்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளா் ப.கிருஷ்ணகோபால் மணப்பாறை நகராட்சி பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தேமுதிக நகரச் செயலா் கோவிந்தராஜ், அமமுக நகரச் செயலா் மதிவாணன் ஆகியோா் தலைமையில் நடந்த பிரசாரத்தில் பேசிய வேட்பாளா், நகராட்சி குப்பைக் கிடங்கினை அதிக இட பரப்புள்ள மாற்றிடத்திற்கு மாற்றுவேன், வாரச் சந்தை, மாட்டுச் சந்தை பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை

வசதி ஏற்படுத்தித் தருவேன். மணப்பாறை நகராட்சியை தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக மாற்றுவேன் என வாக்குறுதியளித்தாா். நிகழ்ச்சியில் தேமுதிக அமமுக எஸ்.டி.பி.ஐ கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com