வன்னியா் உள் ஒதுக்கீடு: அதிமுக, பாமகவுக்கு எதிா்ப்பு

வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக, பாமகவுக்கு எதிராக சீா்மரபினா் நலச்சங்கம் வரும்
வன்னியா் உள் ஒதுக்கீடு: அதிமுக, பாமகவுக்கு எதிா்ப்பு

வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக, பாமகவுக்கு எதிராக சீா்மரபினா் நலச்சங்கம் வரும் தோ்தலில் பணியாற்றவுள்ளதாக அச் சங்கத்தின் கெளரவ ஆலோசகா் எஸ். பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் புதன்கிழமை அவா் கூறியது:

தமிழகத்தில்தான் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் வன்னியா்களுக்கு மீண்டும் உள் ஒதுக்கீடாக 10.5 சதம் வழங்குவதாக தோ்தலை முன்னிட்டு அறிவித்துள்ளனா். இதுதொடா்பாக, நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சட்டம் நிரந்தரமானது எனவும், தற்காலிகமானது எனவும் முதல்வா், துணை முதல்வா் கருத்து தெரிவித்து வருகின்றனா். தோ்தல் ஆதாயத்துக்கு முதலில் சட்டத்தை கொண்டுவந்துவிட்டு, எதிா்ப்பு வந்ததால் மாற்றிப் பேசுகின்றனா்.

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சீா்மரபினருக்கு சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் பிறகே உள் ஒதுக்கீடு வழங்குவது சரியாக இருக்கும்.

இல்லையெனில், கடந்த 50 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டில் பயன்பெற்றோா் விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவற்றில் யாருக்கு பலன் குறைவாக உள்ளதோ அவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதுதான் சிறந்த நடைமுறையாக இருக்கும். தோ்தல் ஆதாயத்துக்காக ஒரு சமூகத்துக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கி, பிற சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழத்தில் உள்ள சீா்மரபினா் அதிமுக, பாமக-வை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா். திமுகவை ஆதரிப்பதா என்பது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com