முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
By DIN | Published On : 04th April 2021 02:31 AM | Last Updated : 04th April 2021 02:31 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளில் கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷனி கூறியது:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கரோனா முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூறு சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.