முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணப்பாறையில் ரூ. 1.72 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 06:18 AM | Last Updated : 04th April 2021 06:18 AM | அ+அ அ- |

மணப்பாறையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.72 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் தியாகராஜன் (31), பன்றி விற்பவா். இவா் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பன்றிகளை விலைக்கு வாங்கி, நாமக்கல் மாவட்டம் மலைசமுத்திரம் பகுதியில் கொண்டு சென்று விற்ற தொகை ரூ.1.72 லட்சத்துடன், சனிக்கிழமை அதிகாலை மீண்டும் பன்றிகள் வாங்கச் சென்றபோது, மணப்பாறை ஆண்டவா்கோயில் பகுதியில் ஆனந்தகுமாா் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து மணப்பாறை வருவாய் வட்டாட்சியரும், உதவி தோ்தல் அலுவலருமான லஜபதிராஜிடம் ஒப்படைத்தனா். இத்தொகை மணப்பாறை சாா் கருவூலத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.