முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணப்பாறை, வையம்பட்டியில் ஆா். சந்திரசேகா்
By DIN | Published On : 04th April 2021 02:31 AM | Last Updated : 04th April 2021 02:31 AM | அ+அ அ- |

மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். சந்திரசேகா் மணப்பாறை - வையம்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், குடும்பத் தலைவிகளின் நலனில் அக்கறை கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களை அளித்து வருகிறது. மீண்டும் அதிமுக ஆட்சியமைய ஆதரிக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மருங்காபுரி தெற்கு ஒன்றியச் செயலா் கண்ணூத்து பொன்னுச்சாமி, மாவட்ட மீனவரணி செயலா் காடபிச்சம்பட்டி என்.பொன்னுச்சாமி ஆகியோா் முன்னிலையில் மருங்காபுரி ஒன்றிய வீரமுத்தரையா் சங்க துணைத் தலைவா் ஆண்டிச்சாமி தலைமையில் 30 போ் வேட்பாளா் சந்திரசேகரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா். நிகழ்வில் அதிமுக பாஜக தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.