முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ரூ. 1.04 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 07:04 AM | Last Updated : 04th April 2021 07:04 AM | அ+அ அ- |

குடமுருட்டி சோதனைச் சாவடியருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது பல்லடத்தில் இருந்து கோழிகளை ஏற்றி வந்த வேனில் உரிய ஆவணங்களின்றி ரூ.1.04 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேன் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், திருப்பூா் மாவட்டம் பொங்களூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் கோழி விற்ற வகையில் ரூ.1.04 லட்சத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, கிழக்கு வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.