முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஸ்ரீரங்கம்: தாய்க்கு வாக்கு சேகரித்த மகள்
By DIN | Published On : 04th April 2021 02:32 AM | Last Updated : 04th April 2021 02:32 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளா் சாருபாலா ஆா். தொண்டைமானுக்கு ஆதரவாக அவரது மகள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
உடல்நிலை சரியில்லாததால் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரிக்க வரவில்லை. இதையடுத்து அவரது மகள் ராதா நிரஞ்சனி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி, மேக்குடி, நாகமங்களம், ஓலையூா் உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து தனது தாய் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாா். எனவே, அவரை வெற்றிெ பறச் செய்யுங்கள் எனக் கேட்டு பிரசாரம் செய்தாா். அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினா் உடனிருந்தனா்.