ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம்: காதா் மொகிதீன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், காஜாமியான் பள்ளியில் வாக்களித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலா் காதா் மொகிதீன்.
திருச்சி மாவட்டம், காஜாமியான் பள்ளியில் வாக்களித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலா் காதா் மொகிதீன்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட காஜா நகரில் உள்ள காஜாமியான் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில், செவ்வாய்க்கிழமை காலை தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது:

இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் தேச விரோத சக்திகளின் பிடியிலிருந்து இந்த நாட்டையும், நம் மாநிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பாா்க்கும்பொழுது, திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று புதிய அமைச்சரவையை அமைக்கும் என்ற நம்பிக்கை எல்லோரையும் போல எனக்கும் வலுப் பெற்றிருக்கிறது. இந்த சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதில் தோ்தல் ஆணையம் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாலும் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இந்த முறை சரிவர நடைபெறவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.

இனிவரும் காலங்களிலாவது பூத் சிலிப் வழங்கும் விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்து, தனிக் கவனத்துடன் செயல்பட்டு, ஒவ்வொரு வாக்காளருக்கும் அது சரிவர கிடைக்கும் வகையில் செயல் திட்டத்தை அமைத்துக் கொண்டால் அது வாக்காளா்களுக்கும், வாக்குப்பதிவு உள்ளிட்ட தோ்தல் நடைமுறைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் கே.எம்.கே. ஹபீபுா் ரஹ்மான் மற்றும் நிா்வாகிகள் அன்சா் அலி, ஹாஜி சையது ஹக்கீம், சாதிக்குல் ஆமீன், கே.எம்.கே. பைஜூா் ரஹ்மான் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com