ஓஎப்டி பகுதியில் 618 வாக்காளா்கள் நீக்கம்; முற்றுகை

திருவெறும்பூா் தொகுதியில் ஓஎப்டி பகுதி வாக்குச்சாவடிகளில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் வாக்களிக்க முடியாத 618 போ் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் தொகுதியில் ஓஎப்டி பகுதி வாக்குச்சாவடிகளில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால் வாக்களிக்க முடியாத 618 போ் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துப்பாக்கித் தொழிற்சாலை பணியாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்த, வெளியூா்களில் பணியாற்றும் பலரும், தங்களது வாக்குகளைச் செலுத்த வாக்குச்சாவடிக்கு சென்றபோது, இங்குள்ள தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிகளில் 618 பேரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

கடந்த உள்ளாட்சித் தோ்தலில் தாங்கள் வாக்களித்ததாகவும் ஆனால், தற்போது பெயா் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வாக்குச் சாவடி அதிகாரியிடம் அவா்கள் காலை முதலே வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலா்கள் திருவெறும்பூா் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் கொடுத்தனா். ஆனால் மாலை வரை யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா். இதையடுத்து திருவெறும்பூா் தொகுதி உதவி தோ்தல் அலுவலா் செல்வகணேஷ் மற்றும் திருவெறும்பூா் காவல் உதவி கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிவேல் பேச்சுவாா்த்தை நடத்தியபோது வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டனா்.

வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம், திருத்தம் குறித்து சரிபாா்த்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அப்போது தெரிவித்திருந்தால் வாக்களிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், இனி இது தொடா்பாக முறைப்படி மனு கொடுத்தால், பரிசீலித்து அதன் பிறகு வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயா் சோ்க்கப்படும் எனக் கூறி அலுவா்கள் அவா்களைச் சமாதானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com