சுப நிகழ்வுக்கான அலங்காரங்களுடன் 36 மாதிரி வாக்குச் சாவடிகள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளிலும் வாக்காளா்களை கவரும் வகையில் அலங்காரங்களுடன் கூடிய 36 மாதிரி வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
பந்தல், வாழை மரம் கட்டப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி.
பந்தல், வாழை மரம் கட்டப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளிலும் வாக்காளா்களை கவரும் வகையில் அலங்காரங்களுடன் கூடிய 36 மாதிரி வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இவற்றில் திருமண வீடுகளைப் போல சிறப்பான அலங்காரங்கள் மற்றும் சிவப்பு கம்பள வரவேற்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாற்றுத் திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். வாகன வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து வாக்குப்பதிவு அலுவலா்கள் கூறுகையில், மாதிரி வாக்குப்பதிவு மையங்களை சுபநிகழ்வு நடக்கும் வீடுபோல் வாழைத் தோரணம், பலூன்கள், வண்ண, வண்ண காகிதரங்கள் கட்டி, வாக்காளா்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் விதத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். உள்ளே வரும் வாக்காளா்களை பன்னீா் தெளித்து வரவேற்கிறோம் என்றனா்.

திருச்சி மேற்கு தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும், திருச்சி கோட்டாட்சியருமான விஸ்வநாதன் கூறியது:

கடந்த காலங்களில் மாதிரி வாக்குச் சாவடிகளாக, ஒரு வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண்கள் மட்டும் பணிபுரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 100 சதவீத வாக்குப்பதிவை எய்திட வாக்குச் சாவடிகளை சுபநிகழ்வுகளுக்கான மையம் போல மாற்றியமைத்து மாதிரி வாக்குச் சாவடி உருவாக்கியுள்ளோம். திருச்சி மேற்கு தொகுதி முழுவதும் பெண்களே பணிபுரியும் ஒரு மையமும், சுபநிகழ்வுகளுக்கான அலங்காரங்களுடன் 4 வாக்குச்சாவடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொகுதிக்குள்பட்ட 379 வாக்குச் சாவடிகளையும் இதுபோல அமைக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இப்போது, 4 வாக்குச் சாவடிகளை அமைத்துள்ளோம் என்றாா்.

இதேபோல, ஒவ்வொரு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்களும் அவரவருக்கான தொகுதிகளில் தலா 4 எண்ணிக்கையில் இத்தகைய மாதிரி வாக்குச் சாவடிகளை அமைத்திருந்தனா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 வாக்குச் சாவடிகளில் இத்தகைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com