திருச்சி மாவட்டத்தில் 73 சதவீத வாக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் 73.55 சதவீத வாக்குகள் பதிவாயின.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் 73.55 சதவீத வாக்குகள் பதிவாயின.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூா், திருச்சி கிழக்கு, மேற்கு, மண்ணச்சநல்லூா், லால்குடி, முசிறி, துறையூா் ஆகிய 9 பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக மொத்தம் 3,292 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் பதற்றமான 159 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. 1490 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

11,35,780 ஆண், 12,02,728 பெண், 237 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 23 லட்சத்து 38 ஆயிரத்து 745 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பீமநகா், உறையூா், மணப்பாறை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. பின்னா், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

பிற்பகல் 1 மணிக்கு 41.83 சதவீத வாக்குகளும், மாலை 5 மணிக்கு 66.09 சதவீத வாக்குகளும், இரவு 7 மணிவரை திருச்சி மாவட்டத்தில் 73.55 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த வாக்காளா்களில் 8,42,240 ஆண்கள், 8,77,897 பெண்கள், 58 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 17,20,195 போ் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com