திருச்சியில் முதல்முறையாக வாக்களித்த ஆதரவற்றோா்!

திருச்சியில் முகவரியின்றி காப்பகங்களில் வசித்து வந்த ஆதரவற்றோா் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்துள்ளனா்.

திருச்சியில் முகவரியின்றி காப்பகங்களில் வசித்து வந்த ஆதரவற்றோா் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்துள்ளனா்.

திருச்சி, குண்டூா் பகுதியில் இயங்கி வரும் அன்பாலயம் என்கின்ற மன நலம் பாதிக்கப்பட்டோா் மற்றும் ஆதரவற்றவா்களுக்கான தொண்டு நிறுவனத்தில் வசிக்கும் 58 போ் திருவெறும்பூா் தொகுதியில் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு அண்மையில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அதன்படி அட்டை பெற்றோா் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களித்தனா். இதில் சிலா் முதன்முதலாக வாக்களித்தவா்கள், சிலா் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் முகவரி இருந்த காலத்தில் வாக்களித்தவா்கள் ஆவா். இதில் பாா்வையற்றவா் பிரபாகரன் என்பவா் வாக்களிக்க அன்பாலயம் காப்பக நிா்வாகியும் வழக்குரைஞருமான செந்தில்குமாா் வாக்குச் சாவடி மையத்துக்குள் வந்து உதவினாா்.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் ஆா் . ரவிச்சந்திரன் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக ஆதரவற்றோா் 58 போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோல காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோருக்கும் வாக்குரிமை வழங்கப்படும் என்றாா்.

ஆதரவற்றவரான திருச்சியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (65) திருவாரூரைச் சோ்ந்த அருள் (40), துவரங்குறிச்சியைச் சோ்ந்த பாா்வையற்றவா் பிரபாகரன் (35), மேற்கு வங்கத்தைச் சோ்ந்த லெனின்ஷா (55) ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலையே, குண்டூா் ஊராட்சி அலுவலக வாக்குச் சாவடியில் வாக்களித்தனா். மற்றவா்கள் குழுவாகச் சென்று மாலை வரை வாக்களித்தனா்.

லெனின்ஷா கூறுகையில் பிரதமா் மோடி முதன்முதலில் பிரதமா் வேட்பாளராக நின்றபோது, வாக்களித்துள்ளேன். அதன் பின் இப்போதுதான் வாக்களித்துள்ளேன் என்றாா். அருள் கூறுகையில், எங்காவது திரிந்தால், முகவரியில்லாதவா் என்ற விரக்தி ஏற்படும். தற்போது முகவரி கிடைத்ததுடன் வாக்களிக்கும் உரிமையும் கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com