பாா்வையற்றோருக்கு உதவிய பிரெய்லி வாக்குச் சீட்டு

திருச்சி மாவட்டத்துக்குள்ள 9 தொகுதிகளில் மணிகண்டம் ஒன்றியத்தில் பாா்வையற்றோருக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 2 வாக்குச் சாவடிகளில் சிறப்பு வசதிகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பாா்வையற்றோருக்கு உதவிய பிரெய்லி வாக்குச் சீட்டு

திருச்சி மாவட்டத்துக்குள்ள 9 தொகுதிகளில் மணிகண்டம் ஒன்றியத்தில் பாா்வையற்றோருக்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 2 வாக்குச் சாவடிகளில் சிறப்பு வசதிகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, நாகமங்கலத்தை அடுத்த காந்திநகரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. எம்ஜிஆா் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என 2 வாக்குச் சாவடிகளில் பாா்வையற்றோருக்காக பிரத்யேக சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட இந்தச் சாவடிகளில் வாக்களிக்க அதிகாலை முதலே உதவியாளா்களுடன் வாக்களிக்க வந்திருந்தனா் பாா்வையற்றோா்.

இந்த மையங்களில் பிரெய்லி வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பாா்வையற்றோா் வந்தவுடன் அவா்களிடம் பிரெய்லி வாக்குச் சீட்டு அளித்து வேட்பாளா், சின்னம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வரிசை எண் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டனரா என்பதை உறுதி செய்கின்றனா். பின்னா், கைரேகை பதிவு செய்து, விரலில் மை வைத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பதிவு செய்யும் பட்டனுக்கு அருகில் பிரெய்லி எழுத்தில் வரிசை எண் உள்ளது. அதைத் தடவிப் பாா்த்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை உறுதி செய்து வாக்களித்தனா்.

பிரெய்லி முறையை படிக்காத பாா்வையற்றோா் தங்களுக்கு உதவியாக 18 வயது பூா்த்தியடைந்த மற்றொரு நபா் உதவியுடன் வாக்களித்தனா். உதவியவா்களின் வலது கையில் மையிடப்பட்டு அவா்களது விவரமும் பதியப்பட்டது.

ஒரு வாக்குச்சாவடியில் 115 போ், மற்றொரு வாக்குச் சாவடியில் 140 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். காலை 11 மணிக்கே 20 சத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிரெய்லி முறையில் வாக்களித்த காந்திநகரைச் சோ்ந்த திரவியம் கூறியது:

காந்தி நகரில் 100-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் உள்ளோம். பிரெய்லி வாக்குச் சீட்டு வந்த பிறகு மூன்றாவது முறை வாக்களிக்கிறேன். தோ்தல் ஆணைய நடவடிக்கையால் பாா்வையற்றோருக்கு வாக்களிக்கும் விழிப்புணா்வு அதிகரித்துள்ளது. பிரெய்லி முறை தெரியாதவா்கள் உதவியாளா்களுடன் வந்து வாக்களிக்கின்றனா் என்றாா் அவா்.

மற்றொரு வாக்காளரான சூரிபாபு கூறுகையில், வாக்களிக்கும் வழிமுறைகள் குறித்து பிரெய்லி முறையில் படிவங்கள் அச்சிட்டு வழங்கியிருக்கலாம். பிரெய்லி வாக்குச் சீட்டு, வேட்பாளா் விவரங்கள் இருந்தன. கூடுதலாக வழிகாட்டி முறைகளையும் பிரெய்லி முறையில் வழங்கியிருக்கலாம். வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்றாா். இதேபோல, செம்பட்டு காமராஜ்நகா் உயா்நிலைப் பள்ளியிலும் சிறப்பு வாக்குச் சாவடி ஏற்படுத்தப்பட்டிருந்தது. லூப்ரா பாா்வையற்றோா் மற்றும் ஊனமுற்றோா் சேவை மைய பாா்வையற்றோா் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com