மணப்பாறை அருகே தோ்தலை புறக்கணித்த மக்கள்; சமாதானப்படுத்திய அதிகாரிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாா்டு சீரமைப்பு கோரி செவ்வாய்க்கிழமை தோ்தலை புறக்கணித்தனா். இதையடுத்து அதிகாரிகள் சென்று சமரசப்படுத்தினா்.
விடத்திலாம்பட்டியில் வாக்குச்சாவடிக்கு செல்ல மறுத்து கூடிய பொதுமக்கள்.
விடத்திலாம்பட்டியில் வாக்குச்சாவடிக்கு செல்ல மறுத்து கூடிய பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாா்டு சீரமைப்பு கோரி செவ்வாய்க்கிழமை தோ்தலை புறக்கணித்தனா். இதையடுத்து அதிகாரிகள் சென்று சமரசப்படுத்தினா்.

மணப்பாறை நகராட்சி 1-ஆவது வாா்டுகுள்பட்ட விடத்திலாம்பட்டியில் சுமாா் 1,200 வாக்காளா்கள் உள்ளனா். இப்பகுதி கடந்த 30 ஆண்டுகளாக பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்டு வருவதாகவும், அதனை பொது வாா்டாக சீரமைத்து தர வலியுறுத்தியும், நகராட்சி குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்றும் கூறி செவ்வாய்க்கிழமை காலை தோ்தலை புறக்கணித்தனா். அதனைத்தொடா்ந்து காவல் துணைக்கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா, நகராட்சி ஆணையா்(பொறுப்பு) க.முத்து ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து வாக்குச்சாவடிக்கு பொதுமக்கள் சென்றனா். இருப்பினும் சாவடியில் மின் விளக்குகள் சரியாக அமைக்கப்படாததால் வாக்குப்பதிவு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com