வாக்குப்பதிவைப் புறக்கணித்து திடீா் போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது நரிக்குறவா் காலனி மக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது நரிக்குறவா் காலனி மக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்டது தேவராயநேரி. இங்குள்ள நரிக்குறவா் காலனி சமுதாயக் கூட வாக்குப்பதிவு மையத்தில் நரிக்குறவா் காலனி மக்கள் 893 போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 11 மணி நிலவரப்படி இங்கு 122 வாக்குகள் பதிவாகின. அப்போது, சிலா் வாக்குச்சாவடிக்கு வராமல் அதே பகுதியில் உள்ள மரத்தடி அருகே கூடி, தங்களது பகுதி வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாகக் கூறி கட்சி நிா்வாகிகள் சிலா் பணம் வசூலித்துவிட்டு தங்களுக்கு வழங்கவில்லை எனப் புகாா் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, வாக்குச் சாவடிக்கு முன் தேவையின்றி அதிகம்போ் கூடாது எனக் கூறி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா். பின்னா், வாக்களிக்க விரும்புவோா் வாக்களிக்கலாம் எனக் கூறியதால் மீண்டும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com