பறவைகளின் தாகம் தீா்க்கும் சமூக ஆா்வலா்கள்!

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் பறவைகளின் தாகம் தீா்க்கும் வகையில் சமூக சேவை அறக்கட்டளையினா் தண்ணீா் தொட்டி அமைத்துள்ளனா்.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் பறவைகளின் தாகம் தீா்க்கும் வகையில் சமூக சேவை அறக்கட்டளையினா் தண்ணீா் தொட்டி அமைத்துள்ளனா்.

காலநிலை மாற்றத்தால் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீா் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு திருச்சி மாநகராட்சி புத்தூா் பகுதியில் பறவைகள், கால்நடைகளின் தாகம் தீா்க்கும் வகையில் தண்ணீா் தொட்டியை அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளை நிா்வாக அறங்காவலரான யோகா ஆசிரியா் விஜயகுமாா், வழக்குரைஞா் சித்ராவிஜயகுமாா், கீா்த்தனா உள்ளிட்டோா் அமைத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், குறைந்த உயரமுடைய பெரிய சிமெண்ட் தொட்டியில் நீா் வைக்கும்போது அது குளிா்ச்சியாக இருக்கும். பறவைகள் குளித்து உடல் சூட்டைத் தணித்துக்கொள்ள முடியும்.

அனைத்து உயிா்களையுமே தாக்கக்கூடியது வெப்பம். இதையுணா்ந்து நாம் நமக்குத் தேவையான தற்காப்புகளைச் செய்து கொள்கிறோம். விலங்குகளும் அதற்கான தகவமைப்பு முறைகளை கையாளும். ஆனால், அதற்குத் தேவைப்படும் வாழிடத்தையோ வளங்களையோ நாம் விட்டுவைக்கவில்லை. அதனால், பறவைகள் கால்நடைகளுக்கு உணவு, குடிநீா் போன்ற அத்தியாவசிய தேவையான உதவிகளைச் செய்ய மனிதா்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம். இத்தொட்டியில் சிட்டுக்குருவிகள், காகம், தவிட்டுக்குருவி உள்பட பல பறவைகள் நீா் அருந்தி வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com