100 நாள் வேலைத் திட்டதொழிலாளா்கள் மறியல்

 துறையூா் - புளியஞ்சோலை சாலையில் ஆலத்துடையான்பட்டி கிராம வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

 துறையூா் - புளியஞ்சோலை சாலையில் ஆலத்துடையான்பட்டி கிராம வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளரான கவிதா அறிவுறுத்தலின்படி நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் அதிக தூரம் நடந்து சென்று பணி செய்தபோது வெயில் தாங்காத வயோதிகா்களும், உடல் பலஹீனமானவா்களும் மயக்கமடைந்தனராம்.

இதுகுறித்து தொழிலாளா்கள் முறையிட்டும் பணித்தள பொறுப்பாளா் கண்டு கொள்ளவில்லையாம். இதைக் கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளா்கள் துறையூா் - புளியஞ்சோலை செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியல் செய்தனா்.

தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகரன் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியலைக் கைவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com