முகக்கவசம் அணியாமல் செல்வோா் மீது நடவடிக்கை
By DIN | Published On : 12th April 2021 12:53 AM | Last Updated : 12th April 2021 12:53 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் செல்வோா் மீது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் அன்று மட்டும் புகரில் முகக்கவசம் அணியாத 568 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதேபோல மாநகரில் 710 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், 8 தனிக்குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணிப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இச்சோதனையை தீவிரப்படுத்தும் விதமாக புகரில் மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும், முக்கிய சோதனை சாவடிகளிலும் உதவி ஆய்வாளா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்தனா்.