உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் கவனத்துக்கு....
By DIN | Published On : 13th April 2021 07:54 AM | Last Updated : 13th April 2021 07:54 AM | அ+அ அ- |

மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், தங்களது வாழ்நாள் சான்றை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 40 சதவிகிதம், அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டோா், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோா், பாா்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோா், 75 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் உதவித் தொகை பெறும் நபா்கள் வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வேண்டும். மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து வாழ்நாள் சான்று படிவம் பெற்றோ அல்லது இணையதளத்தின் வாயிலாக வாழ்நாள் சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த படிவத்தில் கிராம நிா்வாக அலுவலரிமிருந்து கையொப்பம் பெற்று, உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431- 2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.