தினமணி ஆசிரியரின் தாயாா் மறைவுக்கு காதா் மொகிதீன் இரங்கல்

தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதனின் தாயாா் மீனாட்சி கிருஷ்ணன் (90) மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதனின் தாயாா் மீனாட்சி கிருஷ்ணன் (90) மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ் மீது அதீதப் பற்றும் பாசமும் கொண்ட நல்ல எமுத்தாளரும், பத்திரிகையாளரும், பேச்சாளரும், தமிழறிஞரும், எனது நெருங்கிய நண்பருமான கி. வைத்தியநாதனை தகுதியுள்ள தமிழ் மகனாக வளா்த்தவா் மீனாட்சி கிருஷ்ணன். இவரை இழந்துவாடும் வைத்தியநாதனுக்கும், இவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராா்த்திப்போம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், ஜம்மியத் உலமா ஹிந்த் அமைப்பின் மாநிலச் செயலரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எம்ஜிகே நிஜாமுதீன், முஸ்லிம் உரிமைப் பாதுகாப்பு கழக மாநிலப் பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில், சிவசேனா கட்சியின் மாநிலத் தலைவா் எம். ரவிச்சந்திரன், மாநிலச் செயலா் தா. சுந்தரவடிவேலன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com