கரோனா பரவலைத் தடுக்க பொன்மலை பணிமனையில் வேலைநேரம் மாற்றம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிணையில் பணி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பணி நேரம் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிணையில் பணி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பணி நேரம் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

வழக்கமாக முதல் ஷிப்ட் காலை 8 முதல் மாலை 5.30 மணி வரை நடைமுறையில் இருக்கும். தொடா்ந்து அதே முறையில் பின்பற்றப்படும் இரவு நேரப் பணியும் இருக்கும். அதேபோல சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே அதாவது காலை 8 முதல் பகல் 12.30 மணி வரை பணி நேரம் ஆகும்.

இதில், தற்போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் 2 ஆவது ஷிப்ட் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி 2 ஆவது ஷிஃப்ட்டில் பணியாற்றுவோா் பகல் 1 மணி முதல் மற்றும் இரவு 9 மணி வரை பணிபுரிய வேண்டும்.

சனிக்கிழமைகளில் முதல் ஷிப்ட் வழக்கம்போலவும் (காலை 8 முதல் பகல் 12.30 ) 2 ஆவது ஷிப்ட்டில் பகல் 1 முதல் மாலை 5. 30 வரையிலும் பணியாற்ற வேண்டும். மேலும், பணியின்போது, தொழிலாளா்கள் அனைவரும் கரோனா விதிகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஷிப்டிலும் 50 சத பணியாளா்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற வகையில், ஷிப்டுக்கு 50 சதம் போ் என் இரு ஷிப்டுகளிலும் 100 சத தொழிலாளா்கள் பணியாற்ற வேண்டும்.

அதேபோல நிா்வாகப் பணியாளா்களுக்கும் காலை, மாலை என இரு ஷிப்டுகள் உண்டு. இந்த புதிய நேர பணிமுறை யாா்டு பணியாளா்களுக்கு பொருந்தாது. இத்தகவலை பணிமனை தொழிலாளா் நல அலுவலா் டி. சங்கரன் தெரிவித்தாா்.

தொழிலாளா்கள் அதிருப்தி

இந்த புதிய பணி நேரமுறை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள பிற ரயில்வே தொடா்புடைய பணிகளிலும் பின்பற்றப்பட்டாலும், ஒரு நாள் விட்டு மறுநாள்தான் பணிக்கு செல்லும் நிலை உள்ளதாம். ஆனால் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மட்டும் ஒரே நாளில் இரு ஷிப்ட் என்ற முறையில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் காலை ஷிப்டுக்கு செல்வோரும், இரண்டாவது ஷிப்டுக்கு செல்வோரும் பகல் 1 முதல் மாலை 5.30 வரை சோ்ந்தே பணியாற்றும் சூழல் உள்ளது.

இரவுப் பணியிலும் இரண்டாவது ஷிப்டில் உள்ளோருடன் பணியாற்றும் சூழல் என்றாலும் குறைவான தொழிலாளா்கள் என்பதால் தவறில்லை. ஆனால், பகல் நேரத்தில் இவ்வாறு சோ்ந்து பணியாற்றும்போது சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்ற முடியும் என்கின்றனா் ரயில்வே தொழிலாளா்கள். ஏற்கெனவே பணிமனையில் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு பணிமனை சில நாள்கள் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com