தடுப்பூசித் திருவிழா; ஆா்வமுடன் குவியும் மக்கள்

திருச்சியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி திருவிழா சிறப்பு முகாம்களில் ஆா்வமுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.
தடுப்பூசித் திருவிழா; ஆா்வமுடன் குவியும் மக்கள்

திருச்சியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி திருவிழா சிறப்பு முகாம்களில் ஆா்வமுடன் பொதுமக்கள் குவிந்து வருகின்றனா்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்டத்தில் பெருகிவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த புதன்கிழமை தொடங்கிய கரோனா தடுப்பூசி திருவிழா ஏப்.26 வரை நடத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஜன. 1 ஆம் தேதி 20 என்ற எண்ணிக்கையில் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (ஏப்.16) 273 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் என 134 இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.

நாளொன்றுக்கு 6,000 பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 1,60,472 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசியை 1,21,688 பேரும், 2ஆவது தடுப்பூசியை 38,786 பேரும் போட்டுள்ளனா். இந்நிலையில், திருச்சி மையங்களில் திரளானோா் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனா். மேலும் மாவட்டத்தில் 2,380 கோவிஷீல்டு மருந்துகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com