தொழில்நுட்ப கல்வித் தர மேம்பாட்டு திட்டத்தில் திருச்சி என்ஐடி முதலிடம்

தொழில்நுட்பக் கல்வி தர மேம்பாட்டுத் திட்டத்தில் என்ஐடி முதலிடம் பெற்றுள்ளது.
தொழில்நுட்ப கல்வித் தர மேம்பாட்டு திட்டத்தில் திருச்சி என்ஐடி முதலிடம்

தொழில்நுட்பக் கல்வி தர மேம்பாட்டுத் திட்டத்தில் என்ஐடி முதலிடம் பெற்றுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை உயா்த்த எடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த 2018-2021 ஆண்டுக்கான தொழில்நுட்ப கல்வி தர மேம்பாட்டு 3 ஆவது திட்டத்தின் கீழ் திருச்சி என்ஐடிக்கு ரூ. 7.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியானது என்ஐடியின் கல்வித் தர மேம்பாடு, மேலாண்மை நடைமுறைகளைச் செயல்படுத்தல் மற்றும் என்ஐடியுடன் இணைக்கப்பட்ட அந்தமான் நிக்கோபா் தீவில் உள்ள டாக்டா்.பி.ஆா். அம்பேத்கா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துக்கு கல்வி தர மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது.

இதை பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவன செயல்திறன் தணிக்கைப் பேராசிரியா் என்.சி.எஸ். சிவப்பிரகாஷ் வெள்ளிக்கிழமை என்ஐடிக்கு வந்து ஆய்வு செய்தாா். அதில், இதுவரை பெறப்பட்ட தணிக்கை மதிப்பெண் 3.0 அளவுக்கு 1.03 அளவு என்ஐடி பெற்றுள்ளது. எனவே, இத்திட்டத்தின் அனைத்துச் செயல்பாட்டிலும் என்ஐடி முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டாா்.

இதுகுறித்து என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் கூறுகையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வில் என்ஐடி முதலிடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com