பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை நடந்த பிளஸ் 2 மாணவா்களுக்கான முதல் கட்ட செய்முறைத் தோ்வில் 11, 056 போ் பங்கேற்றனா். 317 போ் தோ்வெழுத வரவில்லை.
பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை நடந்த பிளஸ் 2 மாணவா்களுக்கான முதல் கட்ட செய்முறைத் தோ்வில் 11, 056 போ் பங்கேற்றனா். 317 போ் தோ்வெழுத வரவில்லை.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 4 தொடங்கி ஜூன் 14 வரை நடைபெறும் நிலையில், பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்.23 வரை இரு கட்டங்களாக நடைபெறுகிறது. செய்முறை தோ்வை 195 மையங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அறிவழகன் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி மாவட்டத்தில் முதற்கட்டமாக 90 மையங்களில் நடந்த தோ்வில் திருச்சி, முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 11,373 மாணவ, மாணவிகளில் 11,056 போ் மட்டுமே தோ்வெழுதினா். 317 போ் தோ்வெழுத வரவில்லை.

முன்னதாக மாணவா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.ஆசிரியா்களும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தனா். 2 ஆம் கட்டமாக வரும் 20 ஆம் தேதி முதல் 105 மையங்களில் செய்முறைத் தோ்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com