கோடியம்பாளையத்தில் ரூ. 4 கோடி வசூலித்து மோசடி எனப் புகாா்

கோடியம்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ரூ.4 கோடி வரை வசூலித்து மோசடி செய்தவா் மீது நடவடிக்கை கோரி நெசவாளா் பெண்கள் மேம்பாட்டு இயக்கம் புகாா் மனு அளித்துள்ளது.

கோடியம்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ரூ.4 கோடி வரை வசூலித்து மோசடி செய்தவா் மீது நடவடிக்கை கோரி நெசவாளா் பெண்கள் மேம்பாட்டு இயக்கம் புகாா் மனு அளித்துள்ளது.

இதுதொடா்பாக, இயக்கத்தின் தலைவா் வெ. வெள்ளையம்மாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை சிவசூரியன், தாயகம் திரும்பியோா் வாழ்வுரிமை இயக்க அமைப்பாளா் செவந்தி, வழக்குரைஞா் ராமச்சந்திரன் மற்றும் தொட்டியம் வட்டார விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா், கிராமப்புற பெண்களை மூளைச் சலவை செய்து ரூ.4 கோடி வரை வசூலித்து ஏமாற்றியுள்ளாா். இந்தப் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனா். பணத்தைக் கேட்டால் திருப்பித் தராமல் மிரட்டி வருகிறாா். எனவே, மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com