சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம், கோயில் உள் பிரகாரத்தில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்ற சித்திரை தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.
கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்ற சித்திரை தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம், கோயில் உள் பிரகாரத்தில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் கடந்த மாதம் 11 ஆம் தேதி சித்திரைத் தேரோட்ட கொடியேற்ற விழா நடைபெற்ற நிலையில், கரோனா இரண்டாம் அலை உருவானதால், சித்திரைத் தேரோட்டமானது கோயில் உள் பிரகாரத்திலேயே ஜகடைத் தேரில் அம்மனை வைத்து நடைபெற்றது.

காலை 10. 58-க்கு தேரோட்டம் தொடங்கி கோயில் உள் பிரகாரத்தில் வலம் வந்த தோ், 11.28-க்கு நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் கோயில் இணை ஆணையா் கல்யாணி தலைமையில் கோயிலின் தல கிராமமான மருதூா் ஊராட்சித் தலைவா் தினேஷ், கிராமத் தலைவா் கிள்ளிவளவன், மற்றும் மருதூா் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தா்கள், கோயில் பணியாளா்கள், பங்கேற்றனா்.

விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரையிலும் மதியம் 12 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். தேரோட்டத்தின்போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com