‘1 லட்சம் வணிக நிறுவனங்களில் ரூ. 3,000 கோடி வா்த்தகம் பாதிப்பு’

சுமாா் 30 ஆயிரம் கடைகளில் ரூ. 3 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகா் சங்க பேரமைப்பு பொதுச்செயலா் வீ. கோவிந்தராஜுலு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தால் மாநகரப் பகுதியில் சுமாா் 70 ஆயிரம் கடைகள், நிறுவனங்கள், புகா் பகுதிகளில் சுமாா் 30 ஆயிரம் கடைகளில் ரூ. 3 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகா் சங்க பேரமைப்பு பொதுச்செயலா் வீ. கோவிந்தராஜுலு தெரிவித்தாா்.

இலக்கு வைத்து வசூலிப்பதை நிறுத்தாவிட்டால் போராட்டம்: அரசுத் தரப்பில் திடீா் திடீரென புதுப்புது விதிமுறைகளை அமல்படுத்துவது பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தவறில்லை. ஆனால் அபராதம் விதிப்பதை ஏற்க முடியவில்லை.

ஏற்கெனவே கரோனாவால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முககவசத்துக்கு ரூ.500, சமூக இடைவெளிக்கு ரூ.500 என்பதும், அதை காவல் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் போட்டி போட்டு வசூலிப்பதும் கேலிக்கூத்தாக உள்ளது.இதே நிலை தொடா்ந்தால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com