இறைச்சிக் கடைகளில் விறுவிறுப்பான விற்பனை: காய்கனிகள் வாங்கவும் ஆா்வம்

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் இறைச்சிக் கடைகளில் சனிக்கிழமையே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
உறையூா் மீன் சந்தையில் சனிக்கிழமை குவிந்த மக்கள்.
உறையூா் மீன் சந்தையில் சனிக்கிழமை குவிந்த மக்கள்.

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் இறைச்சிக் கடைகளில் சனிக்கிழமையே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளுக்கு கூட்டம், கூட்டமாக வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் அவா்களுக்கு தொற்று பரவும் அபாயத்தை தவிா்க்க முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள மீன், இறைச்சி சந்தை, ஆடுவதைக் கூடங்கள் மற்றும் உயிா் கோழி விற்பனை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஞாயிற்றுக்கிழமை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், அசைவப் பிரியா்கள் ஏமாற்றத்தை தவிா்க்க முன்னெச்சரிக்கையாக சனிக்கிழமையே இறைச்சிகளை வாங்கக் குவிந்தனா்.

இதன் காரணமாக கோழி, ஆட்டிறைச்சிக் கடை, மீன் சந்தை மற்றும் இதர வகை இறைச்சிக் கடைகள் சனிக்கிழமை அதிகாலையே திறக்கப்பட்டன. காந்தி சந்தை, உறையூா் மீன் சந்தை, தென்னூா் பிரதான சாலை, வயலூா் சாலை, பாலக்கரை, கே.கே. நகா், பெரியமிளகுப்பாறை, திண்டுக்கல் சாலை, கருமண்டபம், திருவானைக்கா, அரியமங்கலம், திருவெறும்பூா், செந்தண்ணீா்புரம், சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட் மீன் சந்தை, பால்பண்ணை என மாவட்டம் முழுவதும் இறைச்சிக் கடைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்குவோா் ஆங்காங்கே கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனா்.கடைக்காரா்கள் முன்னெச்சரிக்கையாக கடைகளின் முன் கயிறு கட்டி மக்கள் சமூக இடைவெளியுடன் நிற்க அறிவுறுத்தினா். வரிசையில் வருவோருக்கு மட்டுமே இறைச்சி வழங்கினா். இதேபோல, முட்டை விற்பனை நிலையங்களிலும் கூட்டம் கணிசமாக இருந்தது.

காய்கனிகளுக்கும் கூட்டம்: இதேபோல, காய்கனிகள் வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. காந்தி சந்தையில் சில்லறை வியாபாரம் களைகட்டியது. பொதுமக்கள் போட்டிபோட்டுக் கொண்டு காய்கனிகளை கேட்ட தொகையைக் கொடுத்து அள்ளிச் சென்றனா். மாவட்டம் முழுவதும் அனைத்து காய்கனி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com