அதிமுக பிரமுகா் கொலை: முக்கிய குற்றவாளி திருச்சி நீதிமன்றத்தில் சரண்
By DIN | Published On : 27th April 2021 03:45 AM | Last Updated : 27th April 2021 04:29 AM | அ+அ அ- |

சென்னை மறைமலைநகரைச் சோ்ந்தவா் மாறன் என்கிற திருமாறன். அதிமுக பிரமுகரான இவா் சனிக்கிழமை 4 போ் கொண்ட கும்பலால் குண்டுவீசி கொல்லப்பட்டாா். அப்போது, அவருக்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலா் துப்பாக்கியால் வெடிகுண்டு வீசியவா்களில் ஒருவரான சுரேஷ் உயிரிழந்தாா். மற்றொருவா் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து மறைமலைநகா் போலீஸாா்விசாரித்து வந்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ராஜேஷ் (48), திருச்சி நீதித்துறை நடுவா் மன்றம் எண்-2 இல் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். இதைத் தொடா்ந்து ராஜேஷை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவா் திரிவேணி உத்தரவிட்டாா்.