ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு
By DIN | Published On : 27th April 2021 04:18 AM | Last Updated : 27th April 2021 04:18 AM | அ+அ அ- |

பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி. உடன், மாநகராட்சி அலுவலா்கள்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, அப்பகுதி குடிசைவாழ் மக்கள் திங்கள்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் சுமாா் 19 ஆண்டுகளாக 30 போ் குடிசை அமைத்து, அங்கு குடியிருந்து வந்தனா்.
இந்த இடத்தில் அறிவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு கட்டங்களைக் கட்ட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு செய்ய இடத்திலுள்ள குடிசைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி அலுவலா்கள் கூறினா்.
பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலா்கள் முயற்சி மேற்கொண்ட போது, அப்பகுதி குடிசைவாழ் மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி, மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.