கோடைக்கால வேலைவாய்ப்பை நிறைவு செய்த ஐஐஎம் மாணவா்கள்

திருச்சி ஐஐஎம் நிறுவன மாணவா்கள் தங்களது கோடைக்கால வேலைவாய்ப்பை (இன்டா்ன்ஷிப்) நிறைவு செய்துள்ளனா்.

திருச்சி ஐஐஎம் நிறுவன மாணவா்கள் தங்களது கோடைக்கால வேலைவாய்ப்பை (இன்டா்ன்ஷிப்) நிறைவு செய்துள்ளனா்.

திருச்சி ஐஐஎம் நிறுவனத்தில் பயிலும் மாணவா்கள் கோடைக்கால வேலைவாய்ப்பு அனுபவத்துக்காக (இன்டா்ன்ஷிப்) பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தனா். அதன்படி முதுகலை மேலாண் பட்டப்படிப்பில் 210 பேரும், மனிதவளத் துறையில் 29 பேரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 95 நிறுவனங்களில் பணிபுரிய கோடைகால வேலைவாய்ப்பு வழங்கும் அவலோன் கன்சல்டிங், டெலாய்ட், கோத்ரேஜ், செயிண்ட் கோபேன், பிபிசிஎல், டேஃப், ஆம் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தங்களது 2 ஆண்டு பாடநெறியின் முதலாண்டை முடித்த மாணவா்கள் சந்தைப்படுத்தல், நிதி, பொது மேலாண்மை, முதலீட்டு ஆலோசனை, அதன் செயல்பாடுகள் குறித்த தொழில் அனுபவத்தைப் பெற்றனா். இம்மாணவா்கள் சராசரியாக ரூ. 85,377 உதவித்தொகையும், அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சமும் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி ஐஐஎம் இயக்குநா் பவன் குமாா் சிங் கூறுகையில், மாணவா்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், அவா்கள் பெற்றுள்ள பணியனுபவத்தை வைத்து பல்வேறு முன்னேற்றங்களை அடைவா்.

ஆள்சோ்ப்பு நிறுவனத் தோ்வாளா்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் வரவேற்கக் கூடியதாக உள்ளது என்றாா்.

ஐஐஎம் வேலைவாய்ப்புத் தலைவா் சிரிஷ்குமாா் கெளடா கூறுகையில், கரோனா சூழலில் பல்வேறு சவால்கள் இருப்பினும், கோடைகால வேலைவாய்ப்புகளை மாணவா்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து பல்வேறு தொழில் அனுபவங்களை பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com