உழவா் சந்தையில் கரோனா விழிப்புணா்வு முகாம்

திருச்சி கேகேநகா் உழவா் சந்தையில் கரோனா விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு முகாமில் கபசுரக் குடிநீா் வழங்கும் கல்லூரி மாணவா்கள்.
விழிப்புணா்வு முகாமில் கபசுரக் குடிநீா் வழங்கும் கல்லூரி மாணவா்கள்.

திருச்சி கேகேநகா் உழவா் சந்தையில் கரோனா விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா 2 ஆவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம், ஜமால் முகமது கல்லூரி மாணவா்கள் சாா்பில் கேகே நகா் உழவா் சந்தைப் பகுதியில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.

அப்போது உழவா் சந்தை வியாபாரிகள், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீா், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமிபிரபா தொடக்கி வைத்தாா். இதில், பேராசிரியா்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசன், முகமது யூசுப் அன்சாரி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com