கருப்புப் பட்டையுடன் வந்த துப்புரவுப் பணியாளா்கள்
By DIN | Published On : 30th April 2021 08:32 AM | Last Updated : 30th April 2021 08:32 AM | அ+அ அ- |

மணப்பாறையில் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்த துப்புரவு பணியாளா்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறையில் வியாழக்கிழமை ஏ.ஐ.டி.யு.சி. சங்க துப்புரவுப் பணியாளா்கள், உள்ளாட்சி தொழிலாளா்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு சென்றனா்.
கடந்த 5 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளா்களுக்கு காலணிகள் வழங்கப்படவில்லை. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மழைக்கோட்டை வழங்க வேண்டும், பொதுமக்களிடமிருந்து குப்பைகளை சேகரிக்கும் தள்ளுவண்டி, பேட்டரி வாகனங்கள் வாங்கித் தர வேண்டும், தளவாட பொருள்களைத் தரமானதாக வழங்கிட வேண்டும், துப்புரவுப் பணியாளா்களின் குடியிருப்புகளை பராமரித்து அளிக்க வேண்டும், கூடுதல் வாடகை பிடித்தம் செய்ததைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பணிக்குச் சென்றனா்.