செஞ்சிலுவைச் சங்கத்தினா் கபசுரக் குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 30th April 2021 08:34 AM | Last Updated : 30th April 2021 08:34 AM | அ+அ அ- |

பாவேந்தா் பாரதிதாசனின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் உள்ள பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் செல்வம் மாலை அணிவித்தாா். பதிவாளா் கோபிநாத், தோ்வு நெறியாளா் சீனிவாசராகவன், இந்திரா கணேசன் கல்விக் குழுமத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்டக் கிளை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்டக் கிளைத் தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் செல்வம் கபசுர குடிநீா் வழங்கினாா்.
செயலா் ஜவஹா் ஹசன், இணைச் செயலா் எழில் ஏழுமலை, மருத்துவக் குழுத் தலைவா் இளங்கோவன், மண்டல ஒருங்கிணைப்பாளரும் பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோா் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான வெற்றிவேல், வழிகாட்டுக் குழு உறுப்பினா்கள் குணசேகரன், யோகா ஆசிரியா் விஜயகுமாா் உட்பட பலா் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.