கலை, இலக்கியப் பெருமன்ற வைரவிழா இலக்கியப் போட்டிகள்: கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கலை, இலக்கியப் பெருமன்ற மாநில துணைத் தலைவா் கோ. கலியமூா்த்தி கூறியது:

பொதுவுடைமை இயக்க மூத்த தலைவா்களின் ஒருவரான மறைந்த ஜீவானந்தத்தால் 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தற்போது வைரவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

இதை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகளை ஆக்ஸ்ட் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஓராண்டுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேச்சுப் போட்டி: ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநில சுயாட்சி- இந்திய ஒற்றுமையின் புதிய குரல் என்ற தலைப்பில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் 75988-49174, 94436-94122 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களுக்கு, கல்லூரி அடையாள அட்டையை படம் எடுத்து, ஆக.10-க்குள் அனுப்ப வேண்டும். ஆக.15 காலை 10 மணிக்கு ஜூம் செயலி வழியே போட்டி நடைபெறும்.

கட்டுரைப் போட்டி: பெருமன்ற நிறுவனா் ப. ஜீவானந்தம் பிறந்த நாளான ஆக. 20ஆம் தேதி கவிதை மற்றும் ஆய்வுக்கட்டுரை போட்டிகள் நடை பெற உள்ளன. செந்தமிழ் நாடிது- எங்கள் செந்தமிழ் நாடிது என்ற தலைப்பில் நடைபெறும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்போா் தட்டச்சு செய்யப்பட்டால் 6 பக்கங்களுக்கு மிகாமலும், கையால் எழுதப்பட்டால் 12 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரை அனுப்ப வேண்டும்.

கவிதைப் போட்டி: தமிழ் எங்கள் உரிமை என்ற தலைப்பில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதையை ஆகஸ்ட் 19-க்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். கட்டுரை, கவிதைகளை கவிஞா் கோ. கலியமூா்த்தி, மாநிலத் துணைத் தலைவா், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ஹெச்-சி 686, பகுதி 1, அண்ணா நகா், திருச்சி-620026 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 97151- 85309 என்ற எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com