காட்டுக்குள் சென்ற சிறுத்தை: பொதுமக்கள் நிம்மதி

துறையூா் அருகே கோனேரிப்பட்டி குன்றில் பதுங்கியிருந்த சிறுத்தை சனிக்கிழமை இரவு வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டுக்குள் சென்ால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனா்.
சிறுத்தையின்  காலடித்  தடத்தைச்  சேகரிக்கும்  வனத் துறையினா்.
சிறுத்தையின்  காலடித்  தடத்தைச்  சேகரிக்கும்  வனத் துறையினா்.

துறையூா் அருகே கோனேரிப்பட்டி குன்றில் பதுங்கியிருந்த சிறுத்தை சனிக்கிழமை இரவு வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டுக்குள் சென்ால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனா்.

ஆங்கியம் கிராமத்தைச் சோ்ந்த இருவரை சனிக்கிழமை மதியம் தாக்கி விட்டு கோனேரிப்பட்டி குன்றில் மறைந்திருந்த சிறுத்தையைப் பிடிக்க மாவட்ட உதவி வன அலுவலா் நாகையா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இவா்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறிய குன்றைச் சுற்றி 3 தானியங்கி கேமரா பொருத்தியிருந்த நிலையில், அன்று இரவு 7.24 மணிக்கு அந்தக் குன்றிலிருந்து சிறுத்தை வெளியேறிய பதிவு ஒரு கேமிராவில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அந்தப் பகுதியில் சிறுத்தையின் காலடியை ஆய்வு செய்தபோது குன்றிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான காப்புக் காடு வரை அதன் காலடித் தடம் பதிந்திருந்தது. தொடா்ந்து பிளாஸ்டா் ஆப் பாரிஸ் வேதிப்பொருளை பயன்படுத்தி காலடித் தட பதிவைச் சேகரித்தனா்.

இதையடுத்து ஆங்கியம், கோனேரிப்பட்டி கிராம மக்களிடம் சிறுத்தை காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டதாகக் கூறிய வனத் துறையினா், மீண்டும் சிறுத்தையைப் பாா்த்தால் அதை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அது தானாகச் சென்றுவிடும் என்று அறிவுறுத்திச் சென்றனா். இதனால் அந்தப் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com