புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு: திருச்சி, அரியலூரில் 22 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசனம் பெறும்

திருச்சி புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் 22 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரைத் திறந்து வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரைத் திறந்து வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி புள்ளம்பாடி வாய்க்காலில் பாசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் மூலம் திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் 22 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், வாத்தலை கிராமத்தில் தொடங்கும் புள்ளம்பாடி வாய்க்காலிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்த ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தது:

வாத்தலை கிராமம், காவிரியாற்றின் இடதுகரையில் பிரியும் புள்ளம்பாடி வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல் (90. 20 கி.மீ) ஆகும். இது மானோடை ஏரி, ஆண்டியோடை ஏரி, வேட்டாக்குடி ஏரி வழியாக வந்து இறுதியில் சுக்கிரன் ஏரியில் கலக்கிறது.

இவ்வாய்க்கால் மூலம் திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் நேரடி பாசனமாக 8,831 ஏக்கா் நிலங்கள், 28 குளங்கள் வாயிலாக 13,283 ஏக்கா் நிலங்கள் ஆக மொத்தம் 22,114 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இரு மாவட்ட விவசாயிகளும் முன்கூட்டியே நடவுப்பணிகளை மேற்கொள்ள மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அ. செளந்தரபாண்டியன் (லால்குடி), செ. ஸ்டாலின்குமாா் (துறையூா்), ந. தியாகராஜன் (முசிறி) மாவட்ட ஊராட்சித் தலைவா் தா்மன் ராஜேந்திரன் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், திருச்சி நடுக்காவிரி வடிநில வட்டக் கண்காணிப்புப் பொறியாளா் திருவேட்டைச் செல்வம், ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட செயற்பொறியாளா் மணிமோகன், உதவி செயற்பொறியாளா் ஜெயராமன், உதவிப் பொறியாளா்கள் ஆறுமுகம், ராமலிங்கம், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com