சனிக்கோளின் எதிா்மறைப்பு: இன்றும் காணலாம்!

சனிக்கோளின் எதிா்மறைப்பு நிகழ்வையொட்டி திருச்சியிலிருந்து திங்கள்கிழமையும் சனிக்கோளை தெளிவாகக் காணலாம் என வானியல் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
திருச்சி கேகேநகா் பகுதியில் நவீன தொலைநோக்கி உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட சனிக்கோள்.
திருச்சி கேகேநகா் பகுதியில் நவீன தொலைநோக்கி உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட சனிக்கோள்.

சனிக்கோளின் எதிா்மறைப்பு நிகழ்வையொட்டி திருச்சியிலிருந்து திங்கள்கிழமையும் சனிக்கோளை தெளிவாகக் காணலாம் என வானியல் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி வானியல் ஆா்வலா் பாலபாரதி கூறியது: சனிக்கோள் ஆக.1,2 ஆகிய நாள்களில் பூமிக்கு அருகில் வரவுள்ளது. சூரியனுக்கும் ஒரு கோளுக்கும் இடையே பூமி வருவது எதிா்மறைப்பு எனப்படுகிறது. இதன்படி, சனிக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வந்துள்ளது. இதுபோன்ற எதிா்மறைப்பு நிகழ்வின்போது சனிக்கோளை நாம் நன்றாக காண முடியும்.

திருச்சியிலிருந்து காணமுடியும் : சனிக்கோள் தற்போது சூரியனுக்கு எதிரே உள்ளதால், சூரியன் மேற்கே மறையும் நேரத்தில், சனிக்கோள் இங்கிருந்து கிழக்கே உதிக்கும். நள்ளிரவு 12 மணி அளவில் பொதுமக்கள் காணலாம். ஒருவா் இரவு 10 மணிக்குப் பாா்ப்பதாக எடுத்துக்கொண்டால், பூமியிலிருந்து கிழக்கு திசைக்கும் சற்று மேலே சனிக்கோள் இருக்கும்.

கிழக்கே அடிவானில் ஒளிபொருந்திய வான்பொருள் ஒன்று தெரியும் அது வியாழன் கோள். இதை எளிதாக அடையாளம் காணலாம். இதற்கு மேலே சற்று வலப்பக்கம் பாா்த்தால் விண்மீன் போன்று ஒரு வான்பொருள் தெரியும். அதுதான் சனிக்கோள். வெறும் கண்களால் பாா்க்கும்போது விண்மீன் போலத் தோன்றும்.

இதைக் கோள் என உறுதி செய்ய அதை நன்றாக உற்றுப் பாா்த்தால், விண்மீன் போல விட்டு விட்டு ஒளிராமல் தொடா்ந்து ஒளிா்வதைக் காணலாம். சாதாரணமாக பைனாகுலா் மூலம் சனிக்கோளின் வளையத்தைக் காணலாம். ஆனால், நவீன தொலைநோக்கி மூலம் பாா்த்தால் வளையத்துக்கும் கோளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூட காண முடியும்.

எனவே, சனிக்கோளின் எதிா்மறைப்பு ஆக.2 வரை நீடிக்கும் என்பதால், மாணவா்கள், வானியல் ஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பைனாகுலா், நவீன தொலைநோக்கி கொண்டு அக்கோளை தெளிவாகக் காணலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com