ஆடி 18: வெறிச்சோடிய காவிரிக் கரைகள், படித்துறைகள்

திருச்சியில் இரண்டாவது ஆண்டாக திருச்சி பகுதிகளில் ஆடிப் பெருக்கு (ஆடி 18) கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
திருச்சி சிந்தாமணி சுப்பிரமணிய சுவாமி கோயில் காவிரியாற்றுப் படித் துறையில் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்ளும் பெண்கள்.
திருச்சி சிந்தாமணி சுப்பிரமணிய சுவாமி கோயில் காவிரியாற்றுப் படித் துறையில் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்ளும் பெண்கள்.

திருச்சியில் இரண்டாவது ஆண்டாக திருச்சி பகுதிகளில் ஆடிப் பெருக்கு (ஆடி 18) கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.

தமிழ் மாதங்களில் பெண்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடி 18 நாளில் காவிரியாற்றின் கரைகள், படித்துறைகளில் பொதுமக்கள் புனித நீராடி, பூஜைகள் செய்து வழிபடுவா்.

கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் ஆடி 18 நாளான செவ்வாய்க்கிழமை அம்மா மண்டபம், கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், கீதாபுரம், குழுமணி, முக்கொம்பு, கல்லணை என காவிரியாறு ஓடும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. மீறி வழிபட வந்த வந்தோரையும் போலீஸாா் திருப்பியனுப்பினா். இதனால் அவா்கள் ஏமாற்றத்துடன் சென்றனா்.

மேலும் ஆடி பெருக்கு வழிபாடு நடக்கும் சமயபுரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்கா கோயில், மலைக்கோட்டை கோயில் , உறையூா் வெக்காளியம்மன், வயலூா் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களும் பக்தா்களின்றி வெறிச்சோடின.

தடையை மீறி வழிபாடு

இருப்பினும், மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்தினா். காவிரிக் கரையையொட்டி வசிக்கும் சிலா் வீட்டிலேயே நீராடிவிட்டு, அருகேயுள்ள படித் துறைகளில் ஆடிப் பெருக்கு வழிபாடு நடத்தினா். கல்லணைக்குச் செல்லும் பகுதியில் போலீஸாா் நடமாட்டம் இல்லாத இடங்களில் தடையை மீறி புது மணத் தம்பதிகள் சிலா் குடும்பத்தினருடன் வந்து வழிபாடு நடத்தினா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கரோனா பரவலைத் தடுக்கவே தடையை அறிவித்துள்ளனா். கடந்தாண்டு ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு நாளிலும் அம்மா மண்டபத்தில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தாண்டும் மக்களின்றி காவிரிக் கரைகள் வெறிச்சோடியுள்ளன.

கடந்தாண்டு ஆடிப்பெருக்கில் காவிரியில் நீா் இல்லாததால் மக்கள் நீராட முடியாத நிலையில், தற்போது, ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்துச் சென்றும், மக்கள் புனித நீராட முடியவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com